செய்திகள் :

செங்கோட்டையன் வீட்டுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு -பின்னணி என்ன?

post image
அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.-வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாத நிலையில், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை" என்று தெரிவித்திருந்தார். இப்பிரச்னை தொடர்பாக அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

செங்கோட்டையன்

இந்நிலையில், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஒரு ஆய்வாளர் மற்றும் 3 போலீஸார் அடங்கிய துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ``பாதுகாப்பு வேண்டும் என்று செங்கோட்டையன் காவல் துறையிடம் கோரவில்லை. இருந்தாலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதைத் தவிர்க்க காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் அவர்களாகவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது." என்றனர்.

Corruption: `லஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகள்..' -இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

2024-ம் ஆண்டிற்கான சர்வதேச ஊழல் குறியீட்டில் (Corruption Perceptions Index - CPI) இந்தியா 96-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக நாடுகளின் ஊழல் லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparenc... மேலும் பார்க்க

செங்கோட்டையன் வீட்டில் குவிந்த அதிமுக நிர்வாகிகள் -அவரச ஆலோசனையா? -பரபரப்பில் அதிமுக

அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமை... மேலும் பார்க்க

ஊட்டி: `விடைத்தாள் இல்லை என தேர்வு ரத்து’ - கலெக்டர் தலைமையில் இயங்கும் பள்ளியின் அவலம்

பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊட்டியில் தொடங்கப்பட்ட பிரீக்ஸ் மெமோரியல் பள்ளி 150 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த பள்ளியில் விடைத்தாள் வாங்க பணம் இல்ல... மேலும் பார்க்க

Trump: 'இந்தியா குறைக்க உள்ள இறக்குமதி வரிகள்... காரணம் ட்ரம்ப்-பா?' - ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே, கனடா மீது வரி, மெக்சிகோ மீது வரி, சீனா மீது வரி... என்று வரிகளை அடுக்கிக்கொண்டு போனார் ட்ரம்ப்.அப்போது அவர் பேசுகையில், "இந்தியா, அமெரிக்கா பொருட்கள் மீது அ... மேலும் பார்க்க

மசினகுடி: கட்டுமான பொருட்கள் அனுமதி விவகாரம்; அதிமுக எம்‌.எல்.ஏ மீது வழக்கு பதிவு! - என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்பு வழிமுறைகளை புலிகள் காப்பக ... மேலும் பார்க்க

DMK: "திமுக ஆட்சியில் அதிக பாலியல் வழக்குகள் பதிவாக இதான் காரணம்..." - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் கொடுமை, கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், வேலூரில் ஓடும் ரயில் கர்ப்பிணிப் ப... மேலும் பார்க்க