ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகரைச் சேர்ந்தவர் முத்து.இவரது மனைவி தேவி, மகன் பிரவீன்குமார் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். முத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மனைவி, மகன் உடல்கள் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.