தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி உறுதி: விரைவில் பெயர் அறிவிப்பு!
'பும்ராவுக்கு பதில் மாற்று வீரரை கண்டறிய முடியாது; இந்திய அணியின் ரொனால்டோ அவர்'- ஹர்மிசன் புகழாரம்
பும்ராவுக்கு பதில் மாற்று வீரரைக் கண்டறிய முடியாது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஹர்மிசன் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு (பிப்ரவரி12) அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதே சமயம் பும்ராவும் முதுகு வலி காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியா தொடரில் முதுகில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு தற்போது முழு நேர ஓய்வில் இருந்து வருகிறார்.
இன்னும் பும்ராவிற்கு ஓய்வு தேவை என்பதால் அவர் இடம் பெறவில்லை. பும்ராவிற்கு பதில் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் 23 வயதான ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் பும்ரா குறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர் ஹர்மிசன், “ என்னைப் பொறுத்தவரை பும்ராவுக்கு பதில் மாற்று வீரரை கண்டறிய முடியாது.
உலகின் மிகச்சிறந்த வீரர் பும்ரா. அவர் இல்லாமல் சாம்பியன் டிராபி தொடருக்கு செல்வது ரொனால்டோ இல்லாமல் உலகக்கோப்பைக்கு செல்வதைப் போன்றது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/xdwz5ec2/steve-harmison.jpg)
நான் அணியின் தேர்வாளராக இருந்திருந்தால் தொடர் முழுவதும் அவர் விளையாட விட்டாலும் இறுதிப்போட்டி நடைபெறும் அன்று காலையில் அவரை அணியில் சேர்த்துவிடுவேன்” என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs