ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம்: காலிறுதியில் குகேஷ் தோல்வி!
Jos Buttler: ``எல்லாத்துக்கும் ரோஹித்தாங்க காரணம்!" - தோல்வி குறித்து ஜாஸ் பட்லர்
கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், இந்தத் தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பேசுகையில், ரோஹித் சதமடித்த விதத்தையும் பாராட்டி பேசியிருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/u7s6d16q/AP25040489883414.jpg)
தோல்வி குறித்து பட்லர் பேசுகையில், ``இந்தப் போட்டியில் நாங்கள் நிறைய விஷயங்களை நன்றாக செய்திருந்தோம். பேட்டிங்கிலும் நல்ல நிலையிலேயே இருந்தோம். ஏதோ ஒரு வீரர் பொறுப்பெடுத்து ஆடி 350 ரன்களை எட்ட வைத்திருக்க வேண்டும். ரோஹித்தைதான் கட்டாயம் பாராட்டி ஆக வேண்டும். அவர் அற்புதமாக பேட்டிங் ஆடினார். ஓடிஐயில் பல காலமாக அவர் இப்படித்தான் ஆடி வருகிறார். இன்னும் அதிக ரன்களை நாங்கள் எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்ய தவறிவிட்டோம்.
பவர் ப்ளேயில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தோம். யாராவது ஒருவர் நின்றிருந்தால்கூட இன்னும் பெரிய ஸ்கோரை எடுத்திருப்போம். 330-350 ரன்களை எடுத்திருந்தால் கட்டாயம் எங்களால் டிபண்ட் செய்திருக்க முடியும். ரிசல்ட்டைப் பற்றி யோசிக்காமல் நாம் செய்ய வேண்டியவற்றை சரியான திசையில் செய்துகொண்டே இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதைச் செய்துகொண்டு நேர்மறை எண்ணத்தோடும் இருக்க வேண்டும்." என பட்லர் பேசியிருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-09/6ebi3gbq/20250209224722.jpg)
ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்களை எடுத்து லிவிங்ஸ்டனின் பந்தில் ஆட்டமிழந்திருந்தார். ரோஹித் சர்மாவுக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.