ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!
அருளை அள்ளித்தரும் தருமபுரம் குமரக்கட்டளை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் உள்ளது. சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு கயிலாயத்தில் இருந்து புறப்பட்ட முருகப்பெருமான் இடையில் சில காலம் இத்தலத்தில் தங்கி அம்மையப்பரை வணங்கி சிவபூஜை செய்து போா் சக்தியை பெற்று திருச்செந்தூா் சென்றதாக வரலாறு.
இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இங்கு கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சிவவேல் வாங்கி சூரசம்ஹாரம்: இத்தலத்தில் கந்தா் சஷ்டியின் நிறைவு நாளன்று குமரக்கட்டளை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி இந்திர மயில் வாகனத்தில் எழுந்தருளி, தனது தந்தையாா் மாயூரநாதா் பெருமானிடம் சிவவேலை வாங்கி, கொடுஞ்சூரனை சம்ஹரிப்பது வழக்கம்.
இதேபோல், தைப்பூசம் விழாவும் இக்கோயிலின் முக்கிய உற்சவங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விரமிருந்து ஸ்ரீசுப்ரமணிய சுவாமியை வழிபட்டால் பல்வேறு தடைகள் நீங்குவதுடன், முருகப்பெருமானின் பரிபூரண அருளும் கிட்டும். இக்கோயிலில் தைபூசத் திருநாளில் பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். நிகழாண்டு தைபூசத் திருவிழா செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் சிறப்புக்குரியது. இந்நன்னாளிலே நாமும் முருகப்பெருமானை வழிபட்டு அவரது திருவருளைப் பெறுவோம்.