செய்திகள் :

SAT20 : `சாம்பியன் பட்டம் வென்ற மும்பை கேப்டவுண்' - எல்லா லீகிலும் சாம்பியனான ஒரே அணி

post image
தென்னாப்பிரிக்காவில் நடந்து வந்த SAT20 லீகின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை கேப்டவுண் அணி சாம்பியனாகியிருக்கிறது. இந்த வெற்றி மூலம் மும்பை அணி ஆடி வரும் அத்தனை லீகிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. இந்த சாதனையை வேறெந்த அணியுமே செய்தது இல்லை.

SAT20 லீகின் இந்த சீசனில் மும்பை அணி ஆடிய 10 போட்டிகளில் 7 போட்டிகளை வென்றிருந்தது. 2 போட்டிகளில் தோற்றிருந்தது. ஒரு போட்டியில் முடிவில்லை. முதல் அணியாக ப்ளே ஆப்ஸூக்கு வந்த அந்த அணி முதல் தகுதிச்சுற்றில் பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேமாதிரி, சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி எலிமினேட்டரில் ஜோஹனஸ்பர்க் சூப்பர் கிங்ஸையும் இரண்டாவது தகுதிச்சுற்றில் பார்ல் ராயல்ஸ் அணியையும் வீழ்த்தியது.

இறுதிப்போட்டி ஜோஹனஸ்பர்க் மைதானத்தில் நடந்திருந்தது. மும்பை அணியின் கேப்டன் ரஷீத் கான் தான் டாஸை வென்று முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 181 ரன்களை எடுத்திருந்தது. மும்பை அணியின் சார்பில் ரிக்கல்டன், எஸ்டரைசன், டிவால்ட் ப்ரெவிஸ் ஆகியோர் கணிசமான பங்களிப்பைக் கொடுத்திருந்தனர். இவர்களின் ஆட்டத்தால்தான் மும்பை அணி நல்ல ஸ்கோரை எட்டியது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே 2 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை தட்டி செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர்களால் 105 ரன்களை மட்டுமே எடுத்தது.

மும்பை அணியின் கட்டுக்கோப்பான பௌலிங்கில் திணறிவிட்டனர். ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்த போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை அணி மிக எளிதாகவே போட்டியை வென்று சாம்பியன் ஆகிவிட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி SAT20, ILT20, MLC என தென்னாப்பிரிக்கா, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளின் லீகுகளிலும் அணியை வைத்திருக்கிறது. இந்த அத்தனை லீகுகளிலும் அவர்களின் அணி சாம்பியனும் ஆகியிருக்கிறது. இப்படி ஒரு சம்பவத்தை வேறெந்த அணியும் செய்ததில்லை.

Jos Buttler: ``எல்லாத்துக்கும் ரோஹித்தாங்க காரணம்!" - தோல்வி குறித்து ஜாஸ் பட்லர்

கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. இந்நிலைய... மேலும் பார்க்க

Rohit Sharma: `இப்படித்தான் சதமடித்தேன்...' - ரகசியம் பகிரும் ரோஹித் சர்மா

கட்டாக்கில் நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்களை எடுத்திருந்தார்.... மேலும் பார்க்க

INDvENG : `சதமடித்த ரோஹித்; சம்பவம் செய்த ஜடேஜா!' - இந்திய அணி தொடரை வென்ற காரணங்கள்

கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஓடிஐ போட்டியை வென்றதன் மூலம் இந்தத் தொடரையும் இந்திய அணி வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணி 300+ டார்கெட்டைதான் இந்திய அணிக்கு நிர்ணயித்திருந்தது. அப்ப... மேலும் பார்க்க

Rohit Sharma: `கதை இன்னும் முடியல...' - வந்தார் ரோஹித்; இது ஹிட்மேனின் கம்பேக்!

ரோஹித்தின் கரியரில் அவர் சில காலக்கட்டங்களையும் சில இடங்களையும் மறக்கவே மாட்டார். இரட்டைச்சதம் அடித்த மைதானங்கள், 2023 ஓடிஐ உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பை என அந்தப் பட்டியலில் இப்போது கட்டாக் மைதா... மேலும் பார்க்க

BCCI: இந்திய வீரர்களுக்கு வைர மோதிரத்தை பரிசாக அளித்த பிசிசிஐ! - விவரம் என்ன?

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்களுக்கு பிசிசிஐ வைர மோதிரத்தை பரிசாக அளித்திருக்கிறது.BCCI Ringநமன் விருதுகள் என்ற பெயரில் இந்திய கிரி... மேலும் பார்க்க

Kohli: "கோலியால் வாய்ப்பு கிடைத்தது" - இங்கி. எதிரான அதிரடிக்குப் பின் ஸ்ரேயாஸ் பகிர்ந்த சுவாரஸ்யம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 6) நாக்பூரில் தொடங்கியது. இந்த முதல் போட்டியில், முழங்கால் வலி காரணமாகக் கோலி இறங்கவில்லை. ஜெய்ஸ்வால், ஹர... மேலும் பார்க்க