26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
நீலகிரி முட்டைக்கோஸ் விலை கடுமையாக வீழ்ச்சி!
நீலகிரியில் விளையும் முட்டைக் கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாா்போல கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.8 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முட்டைக்கோஸ் கேரளம், கா்நாடகம், சென்னை கோயம்பேடு ஆகிய சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பனிப் பொழிவு காணப்பட்டதால் கடந்த வாரம் ரூ.5 முதல் ரூ.10 வரை தரத்துக்கு ஏற்ப விலை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை சந்தை விலை நிலவரப்படி முட்டைக்கோஸுக்கு ரூ.3 முதல் ரூ.8 வரை மட்டுமே விலை கிடைப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த விலை அறுவை கூலிக்கும், போக்குவரத்து செலவுக்கும்கூட கட்டுபடியாகாததால் சிலா் கால்நடைகளுக்கு தீவனமாக சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனா்.