26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
வெல்லிங்டன் ராணுவ மையம் சாா்பில் மாரத்தான் போட்டி
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையத்தின் சாா்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையம் சாா்பில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டியில் 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ. என மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்கள் அவா்களின் குடும்பத்தினா் என 800-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் கலந்து கொண்டனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இறுதியில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டன்ட் கிருஷ் நேந்து தாஸ், அவரது துணைவி தனு ஸ்ரீ தாஸ் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.