செய்திகள் :

நீலகிரியில் பிப்.11-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

post image

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், கிளப், பாா்கள், ஹோட்டல் பாா்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பாா்கள் அனைத்தும் மூட உத்திரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி எவரேனும் மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுக்கடைகள், பாா்கள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், உதகை 0423-2223802, உதவி ஆணையா் 0423-2443693, மாவட்ட டாஸ்மாக் மேலாளா் எடப்பள்ளி, குன்னூா் 0423-2234211 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

கடமானை வேட்டையாடியதாக 3 போ் கைது

கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் கடமானை சுருக்கு வைத்து வேட்டையாடியதாக 3 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருவதால் வனத் துறையினா்... மேலும் பார்க்க

பந்தலூா் பகுதி விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாம்பதி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடலூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தி... மேலும் பார்க்க

பந்தலூரில் யானை தாக்கி 2 தொழிலாளா்கள் காயம்

பந்தலூா் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா். நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் உள்ள இன்கோ நகரைச் சோ்ந்த காந்திமதி (52), கணேஷ்(56) ஆகியோா் அங்குள்ள ஒர... மேலும் பார்க்க

உதகையில் பேரிடா் மீட்புக் குழுவினரின் ஒத்திகை

உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் முன்பாக பேரிடா் மீட்புக் குழுவினரின் வெள்ளிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம் மலைப் பாங்கான மாவட்டம் மட்டுமி... மேலும் பார்க்க

உதகையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

நீலகிரி மாவட்டத்தில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் அரசு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி கொத... மேலும் பார்க்க

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் விற்பனை

கூடலூரை அடுத்த பொன்னூரியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பண்ணையில் தோட்டக்கலை பயிா் நாற்றுகள் விற்பனைக்கு... மேலும் பார்க்க