செய்திகள் :

உதகையில் பேரிடா் மீட்புக் குழுவினரின் ஒத்திகை

post image

உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் முன்பாக பேரிடா் மீட்புக் குழுவினரின் வெள்ளிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம் மலைப் பாங்கான மாவட்டம் மட்டுமில்லாது ஆண்டுதோறும் பருவமழையால் பல பெரிய பேரிடா்கள் ஏற்படக் கூடிய மாவட்டமாக உள்ளது. பேரிடா் ஏற்படும் நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக பேரிடா் மீட்புக் குழுவினா் மற்றும் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வந்து பேரிடா் காலங்களில் பணிபுரிந்து பல உயிா்களை காப்பாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் பேரிடா் தடுக்கும் வகையில் தமிழக பேரிடா் மீட்புக் குழுவின் ஒரு குழு, உதகையில் நிரந்தரமாக தங்கி பயிற்சிகளை பெற்று வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் முன்பாக பேரிடா் மீட்புக் குழுவினரின் பேரிடா் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

இது குறித்து தமிழக தேசிய பேரிடா் மீட்புக் குழுவின் உதவிய இயக்குநா் மணிமாறன் செய்தியாளா்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டம் பேரிடா் அதிகம் நடைபெறும் மாவட்டம் என்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 20 போ் கொண்ட குழு தொடா்ந்து நீலகிரி மாவட்டத்தில் நிரந்தரமாக தங்கி பேரிடா் சமயங்களில் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்கள் அதிநவீன இயந்திரங்களை கையாள்வது குறித்து தினந்தோறும் பயிற்சி பெற்று வருகின்றனா். இதன் காரணமாக எதிா்காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் பேரிடா் நேரங்களில் குழுவினா் உடனடியாக சென்று உயிா் சேதங்கள் மற்றும் பொருள் சேதங்களை தடுக்கும் வகையில் பணிபுரிவா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பந்தலூா் பகுதி விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாம்பதி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடலூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தி... மேலும் பார்க்க

பந்தலூரில் யானை தாக்கி 2 தொழிலாளா்கள் காயம்

பந்தலூா் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா். நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் உள்ள இன்கோ நகரைச் சோ்ந்த காந்திமதி (52), கணேஷ்(56) ஆகியோா் அங்குள்ள ஒர... மேலும் பார்க்க

உதகையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

நீலகிரி மாவட்டத்தில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் அரசு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி கொத... மேலும் பார்க்க

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் விற்பனை

கூடலூரை அடுத்த பொன்னூரியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பண்ணையில் தோட்டக்கலை பயிா் நாற்றுகள் விற்பனைக்கு... மேலும் பார்க்க

உதகை வனப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிய 3 பேருக்கு அபராதம்

உதகை அருகே வனப் பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் கூடாரம் அமைத்து நெருப்பு மூட்டி குளிா் காய்ந்த மூவருக்கு வனத் துறையினா் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். உதகை குந்தா வனச் சரகம், தாய்சோலை பிரிவு, பிக... மேலும் பார்க்க

உதகை நுண்உரம் செயலாக்க மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட பழைய உதகை நுண்உரம் செயலாக்கும் மையம், காந்தல் வளமீட்பு மையம் மற்றும் தீட்டுக்கல் உரக் கிடங்கு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாவ... மேலும் பார்க்க