செய்திகள் :

Delhi Election: முதல்வர் அதிஷி, முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் பின்னடைவு - அதிர்ச்சியில் ஆம் ஆத்மி

post image
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்தத் தேர்தலில் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி ஆட்சியை பிடிக்க பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 9 மணி நிலவரப்படி பாஜக 48 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

கெஜ்ரிவால், மோடி, ராகுல் காந்தி

ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலை மூன்று முறை வென்று ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி 21 இடங்களில் மட்டும் முன்னிலை வகித்து பின்னடைவை சந்தித்து இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் 1 இடத்தில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்திருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா முன்னிலை வகிக்கிறார்.

கெஜ்ரிவால், அதிஷி

கால்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி பின்னடைவை சந்தித்திருக்கிறார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி முன்னிலை வகிக்கிறார். அதேபோல, ஜாங்புரா தொகுதியில் போட்டியிட்ட டெல்லி மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகங்கள் பின்னடவை சந்தித்துள்ளது, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`Donke Route' என்றால் என்ன? - சட்டவிரோத குடியேற்றமும் ஆபத்தான பயணமும்! | Explained

ட்ரம்ப்பின் அதிரடி!அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், 'அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தப்படுவார்கள்' என அறிவித்தார். அதன் அடிப்படையில், சி17 என்ற அமெரிக்காவின் போர் வ... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் டைகர் : ஆசைக்காட்டும் பாஜக; 6 எம்.பிக்களுக்கு வலைவிரிக்கும் ஷிண்டே - எச்சரிக்கும் தாக்கரே!

மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்து அதில் இருந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தற்போதைய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தன் வசம் எழுத்து வந்துவிட்டார். இதனால் உத... மேலும் பார்க்க

ஒன் பை டூ

செ.கிருஷ்ணமுரளிசட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க“உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்... அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பட்டியலின மக்களுக்குப் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும், அரசியல் செய்ய வேண்டும் ... மேலும் பார்க்க

'மலக்குழி மரணம்; புகாரளிக்க சென்றவர்களை அலைக்கழித்த காவல்துறை' - சென்னை சூளைப்பள்ள துயரம்

சென்னை சூளைப்பள்ளத்தின் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள கண்ணகி தெருவில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பட்டாபிராமன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். அவரின் இறப்பை 'மலக்குழ... மேலும் பார்க்க

`ஸ்டாலின், இவ்வேளையில் விளம்பர போட்டோ ஷூட்டிங் சுற்றுலாவில் இருப்பது...' - எடப்பாடி பழனிசாமி காட்டம்

கிருஷ்ணகிரியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றி... மேலும் பார்க்க

கோவை: கூட்டணிக் கட்சிகள் போராட்டம்; புகார்களை அடுக்கிய திமுக எம்பி; மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கோவை தி.மு.க எம்.பி., ராஜ்குமார் கலந்து கொண்டார். பொதுவாக, மாமன்றக் கூட்டத்தில் எத... மேலும் பார்க்க