இந்திய ரசிகர்களுக்காக... முதல்முறையாக சிதார் வாசித்த எட் ஷீரன்!
பூனையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க தடயவியல் சோதனை!
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் வளர்ப்புப் பூனையின் உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிய அதன் முடிகளை காவல் துறையினர் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
நல்கொண்டாவைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக வளர்த்து வந்த பூனை, கடந்த 2024 ஆம் ஆண்டு காணமல் போனதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது பக்கத்து வீட்டில் அவரது பூணையைப் போன்றே வேறொரு நிறத்தில் ஒரு பூனை வளர்க்கப்பட்டு வருவதை அவர் கவனித்துள்ளார். இதுகுறித்து, தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்ததினால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, புஷ்பலதா வளர்த்து வந்த பூனையை தனது பக்கத்து வீட்டுக்காரர் திருடியதுடன் அதனை தான் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக அவர் அந்த பூணையின் உடலில் சாயம் பூசி நிறம் மாற்றியுள்ளதாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
அந்த புகாரில் புஷ்பலதா தனது பக்கத்து வீட்டுக்கு சென்றபோது அந்த பூனை அடையாளம் கண்டு தன்னிடம் வந்ததாகவும், தனது வெள்ளை நிறப் பூனைக்கு அவர்கள் பழுப்பு நிறத்தில் சாயம் பூசியுள்ளதாகவும், எனவே தனது பூனையை மீட்டு தருமாறு கூறப்பட்டிருந்தது.
ஆனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர் அது தன்னுடைய பூணை என்றும் அவர் அந்த பூனையுடன் சேர்த்து மொத்தம் 6 பூனைகள் தனது வீட்டில் வளர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த குழப்பத்திலிருந்து அந்த பூனையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க காவல் துறையின் அந்த பூனையின் உடலிலிருந்து முடிகளை சேகரித்து அதை தடயவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பியுள்ளனர். அந்த சோதனை முடிந்து அதன் அறிக்கை வெளியான பின்னரே உண்மையான உரிமையாளர் யார் என்று தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது.