செய்திகள் :

ரயிலில் பாலியல் துன்புறுத்தல்: கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தை உயிரிழப்பு!

post image

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த கரு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள 4 மாதக் கரு உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.

நேற்றுவரை இருந்த குழந்தையின் இதயத் துடிப்பு இன்று நின்றுவிட்டதாகவும் உடனடியாக அறுவைச் சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலியல் துன்புறத்தலில் ஹேமராஜிடம் அரை மணி நேரம் போராடியதாகவும் இதுபோன்ற நிலைமை யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் கர்ப்பிணி ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் தற்போது கரு உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! நடந்தது என்ன?

கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! நடந்தது என்ன?

வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4- மாத கர்ப்பிணி, திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். பிப்-6 அன்று தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது அவர், ரயிலில் கழிவறைக்குச் சென்றுள்ளார்.

மகளிர் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில், அங்கிருந்த இளைஞர், பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், கர்ப்பிணியை கே.வி. குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு, ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் அந்த நபர் இறங்கிச் சென்றுள்ளார்.

ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில், கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணியை மீட்ட ரயில்வே காவல்துறையினர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர் படுகாயமடைந்த பெண்ணிடம் ரயில்களில் குற்றங்களைச் செய்யும் பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களைக் காண்பித்து விசாரித்தபோது, அந்த பெண் ஹேமராஜின் புகைப்படத்தை அடையாளம் கண்டு கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து கே.வி.குப்பம் செல்லும் வழியில் ஹேமராஜை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே 2024-ம் ஆண்டு ஹேமராஜ், சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணை ரயிலில் வரவழைத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த வழக்கும் 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் செல்போனை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட வழக்கும் இவர் மீது உள்ளது.

இதையும் படிக்க | இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும்: திருமாவளவன்

15 தலிபான் தீவிரவாதிகள் கைது!

பாகிஸ்தானில் 15 தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் கிடைக்கப்பெற்ற 143 ரகசி... மேலும் பார்க்க

அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷியப் பாடகர் மர்ம மரணம்!

ரஷிய அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.ரஷியாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும... மேலும் பார்க்க

நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க் நகரத்தின் தி குயின... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் பர்வேஷ்?

புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வர... மேலும் பார்க்க

மணிப்பூர்: துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பிஷ்னுபூரின் அய்கீஜங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று (... மேலும் பார்க்க

நியூயார்க்: இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் போதையில் தனது வாகனத்தை அதி வேகமாக ஓட்டி 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2... மேலும் பார்க்க