மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: தில்லி தோல்வி குறித்து கேஜரிவால்
தில்லி முதல்வர் பர்வேஷ்?
புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புது தில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான கேஜரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்துள்ள நிலையில், பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
முதல்வர் பதவிக்கான போட்டியில் கைலாஷ் கெலாட், கபிஸ் மிஸ்ரா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான கேஜரிவால் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்துள்ள நிலையில், ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோல்வி அடைந்துள்ளார்.
தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக சிசோடியா தெரிவித்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
இதனிடையே, கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட தில்லி முதல்வர் அதிஷி 52,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வமாக அறிவிப்புக்கு பின்னரே வாக்குகள் வித்தியாசம் தெரியவரும்.
அதிஷி வெற்றி! கேஜரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி!
பாஜக ஆட்சி
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தில்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி. வெற்றியை வழங்கிய தில்லி மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பர்வேஷ், மோடியிந் தொலைநோக்குப் பார்வையை தில்லிக்கு கொண்டு வரும் என பர்வேஷ் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்த தில்லி மக்கள், பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த நிலையில் 2025 பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தங்களது பார்வையைத் திருப்பியுள்ளனர்.