சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக். பிரதமர்
சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் பாகிஸ்தான் அணியின் இலக்கல்ல, இந்திய அணியை வீழ்த்துவதும்தான் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.
இதையும் படிக்க:ராகுல் டிராவிட், ஜோ ரூட் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!
இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இந்தியாவை வெல்வதுதான் இலக்கு
சாம்பியன்ஸ் டிராபி தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் பாகிஸ்தான் அணியின் இலக்கல்ல, இந்திய அணியை வீழ்த்துவதும்தான் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அறிமுகமான திடலிலே புதிய மைல்கல்லை எட்டிய நாதன் லயன்..!
புதுப்பிக்கப்பட்ட கடாஃபி மைதானத்தை திறந்து வைத்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பேசியதாவது: நம்மிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். சமீப காலங்களில் நமது வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் பாகிஸ்தானின் இலக்கல்ல. இந்திய அணியை வீழ்த்துவதும் பாகிஸ்தான் அணியின் இலக்காகும். ஒட்டு மொத்த பாகிஸ்தானும் நமது வீரர்களுடன் துணை நிற்கிறது என்றார்.