முத்தரப்பு தொடர்: சதம் விளாசிய கிளன் பிலிப்ஸ்; பாகிஸ்தானுக்கு 331 ரன்கள் இலக்கு!
‘தீயாய் மோதும் கண்கள்..’ கவனம் பெறும் காதல் என்பது பொதுவுடமை பாடல்!
காதல் என்பது பொதுவுடமை படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் காதலையும் சமூகம் எப்படி கையாள்கிறது என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான இது காதலர் தினத்தன்று பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: சர்வதேச விருதுபெற்ற பேட் கேர்ள்!
லிஜோமோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது.
தற்போது, சிறப்பு காட்சிகளிலும் பலரிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, ‘தீயாய் மோதும் கண்கள்..’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. கண்ணன் நாராயணன் இசையமைப்பில் உமா தேவி எழுதிய இப்பாடலை உத்தாரா உன்னி கிருஷ்ணன் பாடியுள்ளார்.