இந்திய ரசிகர்களுக்காக... முதல்முறையாக சிதார் வாசித்த எட் ஷீரன்!
இந்திய இசைக்கருவியை முதல்முறையாக வாசித்த பிரபல இசைக்கலைஞர் எட் ஷீரனின் விடியோ வைரலாகியுள்ளது.
"ஷேப் ஆஃப் யூ" என்ற பாடலின் மூலம் உலகப் புகழ்ப்பெற்ற இசைக் கலைஞர் எட் ஷீரன். இந்தப் பாடல் 8 ஆண்டுகளுக்கு முன்பாக யூடியூப்பில் வெளியாகி தற்போது 6 பில்லியன் (600 கோடி) பார்வைகளைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எட் ஷீரன் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்து வருகிறார்.
சமீபத்தில் சென்னை வந்த அவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த எட் ஷீரனிடம் இந்திய ரசிகர்கள் இந்திய கிளாசிக்கல் இசைக்கருவியான சிதாரை வாசிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
ரசிகர்களுக்காக 33 வயதாகும் எட் ஷீரன் சிதார் கலைஞர் மேகா ராவத் உதவியுடன் சிதாரை வாசித்த விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “முதல்முறையாக சிதாரை உபயோகித்தேன். மேகா ராவத் என்ற சிறப்பான ஆசிரியர் கிடைத்தார்” எனக் கூறியுள்ளார்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜன.30இல் புணேவில் தொடங்கிய இவரது இசைப் பயணம் அடுத்ததாக ஹைதராபாத், சென்னையில் முடிவடைந்தது.
இன்று பெங்களூரிலும் பிப்.12ஆம் தேதி ஷில்லாங்கிலும் பிப்.15இல் தலைநகர் தில்லியிலும் இசைக் கச்சேரி நடக்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.