கார்த்தி 29 படத்தில் வடிவேலு? ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடிகர் கார்த்தியில் 29ஆவது படத்தில் பிரபல நடிகர் வடிவேலு இணைந்துள்ளதாக இணையத்தில் போஸ்டர் வைரலாகி வருகிறது.
நகைச்சுவை கதாபாத்திரங்கள் நடித்து பிரபலமான வடிவேலு தற்போது நாயகனாகவும் சிறப்புத் தோற்றங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
கடைசியாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
பிறகு சந்திரமுகி 2 என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மாரீசன், கேங்கர்ஸ் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் கார்த்தியின் 29ஆவது படத்தை டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்குகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
இந்தப் படம் இந்தாண்டு (2025) வெளியாகுமென முன்னமே தெரிவிக்கப்பட்டது.
கடலில் ஒரு கப்பல் வருவது போன்ற போஸ்டர் கடந்தாண்டே வெளியாகியிருந்தது. அதே போல வடிவேலு, கார்த்தி இருக்கும் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்தப் போஸ்டரை இன்னும் வெளியிடவில்லை.
இதைப் பகிரும் கார்த்தி ரசிகர்கள், “அண்ணாவின் முதல் ரூ.200 கோடி படம் தயாராகிவிட்டது” எனக் கூறுகிறார்கள்.
• #Karthi29 - Raw, Rustic & Dark Gangster Flick Loading Keep Your Expectations Very High Sambavam Loading 2025. @Karthi_Offl Anna 200 Cr Club ⏳#Karthi#Vadivelu@directortamil77@prabhu_srpic.twitter.com/XqVtSRGL2R
— karthi_AIFC (@KarthiAifc) February 8, 2025