செய்திகள் :

ஈரோடு கிழக்கு தேர்தல்: திமுக வெற்றி; டெபாசிட் இழந்த நாதக!

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக உள்ளிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். நாதக சீதாலட்சுமி 23,810 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். வெற்றி குறித்து வி.சி.சந்திரகுமாா் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றியை முதல்வருக்கு சமர்ப்பிக்கிறேன்.

வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி. எவ்வளவு அவதூறு கருத்துகளை பரப்பினாலும் இறுதியில் திமுகவே பெற்றி பெற்றுள்ளது என்றார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானாா்.

இதைத் தொடா்ந்து, இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தோ்தலை தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, இந்தத் தோ்தலில் திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 போ் போட்டியிட்டனா். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலை புறக்கணித்தன.

தில்லியைப் போல 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை

பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, 67.97 சதவீதம் வாக்கு பதிவானதாக இந்திய தோ்தல் ஆணைய இணையதளத்தில் தகவல் வெளியானது. ஆனால், வாக்குப் பதிவு சதவீதம் குறித்து அதிகாரபூா்வமாக எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி- எடப்பாடி பழனிசாமி

இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று தில்லி பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர... மேலும் பார்க்க

தில்லியைப் போல 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை

தில்லியைப் போல 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலர்வதை கொண்டாடுவோம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை சென்னை கமலாலயத்தில் பாஜகவினர்... மேலும் பார்க்க

என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி

என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை அவமதித்த அமெரிக்காவைக் கண்டித்தும், அமெரிக்... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும்: திருமாவளவன்

தில்லி தேர்தல் முடிவுகளைக் கருத்தில்கொண்டு இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களுடன்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில், முதல் சுற்று நிலவரத்தில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 8,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1.081 வாக்குகளுடன் இரண்ட... மேலும் பார்க்க