அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்
என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி
என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை அவமதித்த அமெரிக்காவைக் கண்டித்தும், அமெரிக்காவின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு விரோதமாக தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை கண்டித்தும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் வைத்தியநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் என அனைத்து பிரிவு நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் மத்திய அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த முயன்றபோது போலீஸார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.
பின்னர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்பட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, மோடி அரசு, இந்தியர்களை பற்றி கவலைப்படுவதில்லை.
இலங்கை அரசால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதை பற்றி கவலைப்படுவதில்லை என்றும், நமது முதல்வர் ரங்கசாமியின் கட்சி அகில இந்திய பேரியக்கம். எனவே அடுத்து உத்திரப் பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலிலும் போட்டியிட வேட்பாளரை நிறுத்துவார்.
இவரே தனிப்பெரும் தலைவர், இவரே தொண்டர். மேலும் இவரது அரசியல் சந்தர்ப்பவாத அரசியல், எப்பொழுதும் கூட்டணி சேர்ந்து நாற்காலியை பிடிப்பதுதான் இவரது எண்ணம், ரங்கசாமி ஒரு பச்சோந்தி என்றும், தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திப்பார்.
சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக். பிரதமர்
தவெகவுடன் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த நாராயணசாமி, எந்த பக்கம் காத்து அதிகமாக வீசுகிறதோ அந்த பக்கம் ரங்கசாமி செல்வார் என்றும் நாற்காலிக்காக எதுவும் செய்வார், தேவைப்பட்டால் அவரது கட்சி கூட கலைக்க தயங்கமாட்டார் எனவும், தில்லியில் காங்கிரஸ் கட்சி பலமாக இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.
அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் எனக் கூறினார்.