செய்திகள் :

சர்வதேச விருதுபெற்ற பேட் கேர்ள்!

post image

பேட் கேர்ள் திரைப்படம் ரோட்டர்டம் திரைவிழாவில் விருது வென்றுள்ளது.

இயக்குநர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் குடியரசு நாளில் வெளியிடப்பட்டது.

முதன்மை கதாபாத்திரமான அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் பள்ளி காதல் வாழ்க்கை, முதல் முத்தம், காதல், ஆசைகள், எதிர்பார்ப்புகளை வைத்து படம் நகர்வதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க: கார்த்தி 29 படத்தில் வடிவேலு? ரசிகர்கள் மகிழ்ச்சி!

டீசரில் பேசப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சிகள் பிராமணர்களை மோசமாக சித்திரிப்பதாகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக், இயக்குநர் மோகன் ஜி தொடர்ந்து தன் அதிருபதியை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

பேட் கேர்ள் படக்குழுவினர்.

இந்த நிலையில், ரோட்டர்டம்மில் நடைபெற்ற 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பேட் கேர்ள் திரைப்படத்துக்கு அறிமுக இயக்குநர்களை கௌரவிக்கும் நெட்வொர்க் ஃபார் தி புரமோஷன் ஆஃப் ஆசியன் சினிமா (NETPAC - Network for the promotion of asian cinema) விருது வழங்கப்பட்டுள்ளது.

‘தீயாய் மோதும் கண்கள்..’ கவனம் பெறும் காதல் என்பது பொதுவுடமை பாடல்!

காதல் என்பது பொதுவுடமை படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்இயக்கத்தில் உருவான திரைப்படம் காதல் என்பது பொதுவுடமை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் காதலையும் ச... மேலும் பார்க்க

கார்த்தி 29 படத்தில் வடிவேலு? ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் கார்த்தியில் 29ஆவது படத்தில் பிரபல நடிகர் வடிவேலு இணைந்துள்ளதாக இணையத்தில் போஸ்டர் வைரலாகி வருகிறது. நகைச்சுவை கதாபாத்திரங்கள் நடித்து பிரபலமான வடிவேலு தற்போது நாயகனாகவும் சிறப்புத் தோற்றங்களில... மேலும் பார்க்க

இந்திய ரசிகர்களுக்காக... முதல்முறையாக சிதார் வாசித்த எட் ஷீரன்!

இந்திய இசைக்கருவியை முதல்முறையாக வாசித்த பிரபல இசைக்கலைஞர் எட் ஷீரனின் விடியோ வைரலாகியுள்ளது."ஷேப் ஆஃப் யூ" என்ற பாடலின் மூலம் உலகப் புகழ்ப்பெற்ற இசைக் கலைஞர்எட் ஷீரன்.இந்தப் பாடல் 8 ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

மகேஷ் பாபுவின் புதிய சொகுசு திரையரங்கம் திறப்பு..!

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ஏஎம்பி சினிமாஸ் (ஏசியன் மகேஷ் பாபு) என்ற புதிய சொகுசு திரையரங்கம் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஏஎம்பி சினிமாஸ் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து ஏசியன் சினி... மேலும் பார்க்க

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரெட்ரோ டீசர்..!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது. சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்பட... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 08-02-2025சனிக்கிழமைஇன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய... மேலும் பார்க்க