அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்
நியூசி. வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?
சாம்பியன்ஸ் டிராபி தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக். பிரதமர்
லாக்கி ஃபெர்குசனுக்கு காயம்
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில், நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் சர்வதேச டி20 லீக் தொடரில் விளையாடியபோது, ஃபெர்குசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் தன்மை குறித்து அறிந்துகொள்ள ஃபெர்குசனுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அறிமுகமான திடலிலே புதிய மைல்கல்லை எட்டிய நாதன் லயன்..!
இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியதாவது: லாக்கி ஃபெர்குசனுக்கு நேற்று ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர்கள் கூறிய பிறகே, ஃபெர்குசனுக்கான காயம் எந்த அளவில் இருக்கிறது என்பது தெரிய வரும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஃபெர்குசனால் விளையாட முடியாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக அணியில் மாற்று வீரர் சேர்க்கப்படுவார் என்றார்.