Delhi : 'பாஜக தலைநிமிர்கிறது; ஆம் ஆத்மி தலைகுனிகிறது; காங்கிரஸ்...'- ரைமிங்கில் தமிழிசை
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 47 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் கடந்த 2014, 2015, 2020 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆம் ஆத்மி 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவி இருக்கிறார்.
![மோடி](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/4rv4t4mp/pm-modi-celebrates-69th-birthday-in-gujarat.jpg)
பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தற்போது 46 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இப்போதைக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை அமைக்கும் சூழல் நிலவுகிறது. இதையொட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
பாஜகவின் இந்த வெற்றி குறித்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “ பாஜக தலைநிமிர்கிறது… ஆம் ஆத்மி தலைகுனிகிறது… காங்கிரஸ் நிலைகுலைகிறது… பாஜகவின் இந்த வெற்றி எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தமிழகத்தில் இருந்து நிறைய தலைவர்கள் டெல்லிக்கு சென்று பிரச்சாரம் செய்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றி.
வளர்ச்சிக்கானத் திட்டங்களை முன்னெடுக்கும் என்பதற்காக டெல்லி மக்கள் பாஜகவிற்கு வாக்கு அளித்திருக்கிறார்கள். தலைநகரிலேயே தாமரை மலரும் பொழுது, தமிழகத்திலும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது. 2026-ல் தமிழகத்தில் தாமரை மலர்வதை நாங்கள் கொண்டாடுவோம். அந்த நம்பிக்கையை இந்தத் தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது. " என்றார்,
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs