Delhi: `பாஜக-விற்கு வாழ்த்துகள்... மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்!' - தோல்வி குறித்து கெஜ்ரிவால்
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக 48 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. டெல்லியில் கடந்த 2014, 2015, 2020 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆம் ஆத்மி 24 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தற்போது 46 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/3jroym09/QQ32R7OLP5L57PSQNV6FXFMDRQ.jpg)
இப்போதைக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை அமைக்கும் சூழல் நிலவுகிறது. இதையொட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ஆம் ஆத்மி தோல்வியைச் சந்திருக்கிறது. குறிப்பாக புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவி இருக்கிறார்.
இந்நிலையில் ஆம் ஆத்மின் தோல்வி குறித்து கெஜ்ரிவால் பேசியிருக்கிறார். “நாங்கள் மக்களின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்ற பாஜக-விற்கு வாழ்த்துகள். மக்களுக்கு உறுதியளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 8, 2025
கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்புத் துறையில் நாங்கள் நிறையப் பணிகளைச் செய்துள்ளோம். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக மட்டுமல்லாமல், மக்களுடன் இருந்து அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.