Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
பந்தலூா் பகுதி விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு பயிற்சி
பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாம்பதி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற காளான் வளா்ப்பு பயிற்சியில் உதவி தோட்டக்கலை அலுவலா் வினோத், தோட்டக்கலைத் துறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், திட்டங்களை பெற விவசாயிகள் சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் விளக்கமளித்தாா்.
முன்னோடி விவசாயி அனீஷ், காளான் வளா்ப்பு மற்றும் காளான் வளா்ப்பில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தாா். முகாமில் 40 மேற்பட்ட விவசாயிகள், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்ட உதவி மேலாளா் ஆன்சி டயானா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.