நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2024: பிசினஸ் சாதனையாளர்கள் சொன்ன வெற்றிச...
உதகையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
நீலகிரி மாவட்டத்தில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் அரசு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி கொத்தடிமை தொழிலாளா் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வாசிக்க, அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் அதனை ஏற்றுக் கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புக்கான கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், உதவி ஆணையா் (கலால்) தனப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சதீஷ்குமாா், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.