செய்திகள் :

தில்லியில் யாா் ஆட்சி?: பாஜக 30 இடங்களில் முன்னிலை

post image

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக்கானத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக 30 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

புதுதில்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ்வர்மாவை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பின்தங்கியுள்ளார்.

கல்காஜி தொகுதியில், முதல்வர் அதிஷி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை விட பின்தங்கியுள்ளார்.

ஜங்புராவில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் பின்தங்கியுள்ளார்.

பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி வேட்பாளர் சவுரப் பரத்வாஜ் முன்னிலை வகித்து வருகின்றனர்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆதிக்கம் அப்படியே இருக்கிறதா அல்லது 1998-க்குப் பிறகு முதல் முறையாக தில்லியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பின்னர் தெரியவரும்.

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இ... மேலும் பார்க்க

27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்: சித்தார்த் சாஹிப் சிங்

புதுதில்லி: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் என புதுதில்லி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் சகோதரர் சித்தார்த் சாஹிப் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும்... மேலும் பார்க்க

தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை

புதுதில்லி: தில்லி சட்டப்பேரவைக்கானத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக 36 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 16 இடங்களிலும் முன்னிலை பெற... மேலும் பார்க்க

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கும் விற்பனையாகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரு... மேலும் பார்க்க

தில்லியில் யாா் ஆட்சி?: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் சனிக்கிழமை (பிப். 8) தொடங்கியுள்ளது.70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற ... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்துக்கான முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

நெல்லை வந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த மாவட்டத்துக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரு நாள் பயணமாக நேற்று (பிப். 6) நெல்லை வந்தார். கங்கைகொண்டான்... மேலும் பார்க்க