தில்லி தேர்தல் நிலவரம் பற்றி தெரியாது: பிரியங்கா பதில்
கேரள மாநிலம் கன்னூர் வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, தில்லி தேர்தல் நிலவரம் பற்றி தெரியாது என்று பதிலளித்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஆம் ஆத்மி பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை.