நியூசி. வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?
பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கெலோட் முன்னிலை!
தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 12.30 நிலவரப்படி, பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கெலோட் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
பிஜ்வாசன் தொகுதியில் 40,750 வாக்குகளைப் பெற்று கைலாஷ் கெலோட் முன்னிலையிலும், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஆம் ஆத்மியை சேர்ந்த சுரேந்தர் பரத்வாஜ் 33,235 வாக்குகள் பெற்று பின்னடைவையும் சந்தித்துள்ளார். சுமார் 7,515 வாக்குகள் முன்னிலையில் பாஜகவின் கைலாஷ் கெலோட் முன்னிலை வகித்து வருகிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தில்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி, வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. ஒருவேளை அடுத்தடுத்த சுற்றுகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றாலும் கூட, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்குமா என்பது சந்தேகம். கடந்த இரண்டு தேர்தல்களின்போது பெற்ற வெற்றியைப் போல அது இருக்காது என்றும் கூறப்படுகிறது.