சென்னை பெட்ரோலியக் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர், உதவி அலுவலர், அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 01/2025-CPCL/HRD:03:056
பணி: Engineer
பிரிவுவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemical - 15
2. Mechanical - 3
3. Electrical - 4
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Officer(Official Language)
காலியிடங்கள்: 1
தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Officer(Human Resources)
காலியிடங்கள்: 2
தகுதி: மனிதவள மேலாண்மை, மேலாண்மை, தொழிலக தொடர்பியல், தொழிலாளர் நலன், சமூக சேவை, வர்த்தக மேலாண்மை போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.2.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.