அறிமுகமான திடலிலே புதிய மைல்கல்லை எட்டிய நாதன் லயன்..!
ஆஸி. சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.
37 வயதாகும் நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆக.31ஆம் நாளில் காலே திடலில் அறிமுகமானார்.
தற்போது, அதே காலே திடலில் 550 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை தாண்டியுள்ளார். தினேஷ் சண்டிமால் விக்கெட்டை எடுத்தபோது இந்த சாதனையை நிகழ்த்தினார்.
தற்போது, மொத்தமாக 551 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் விளையாடி வருகிறார்.
2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 257க்கு ஆல் அவுட்டானது இலங்கை. ஆஸி. 414 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
2ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி 33 ஓவர்கள் முடிவில் 98/4 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் லயன், குன்னஹ்மேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.
டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள்
1. முத்தைய முரளிதரன் - 800
2. ஷேன் வார்னே - 708
3. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 704
4. அனில் கும்ப்ளே - 619
5. ஸ்டூவர்ட் பிராட் - 604
6. க்ளென் மெக்ராத் - 563
7. நாதன் லயன் - 551
NICE, GARRY!
— Fox Cricket (@FoxCricket) February 8, 2025
Nathan Lyon is firmly among the greats as he reached a superb milestone on the ground where he made his debut
LIVE https://t.co/dwhUWzw4Yfpic.twitter.com/tcAH3CZyPR