என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும்: நாராயணச...
WAVES: `முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்!' - ரஜினி, சிரஞ்சீவி, ஷாருக் கானுடன் நடைபெற்ற வேவ்ஸ் ஆலோசனை!
உலக ஒலி - ஒளி பொழுபோக்கு மாநாடு (WAVES) இந்தாண்டில் நடக்கவிருக்கிறது.
பிரபலங்கள் பலரும் இந்த மாநாட்டிற்கான ஆலோசனைக் குழுவில் இருக்கிறார்கள். பொழுதுபோக்கு துறைக்கு உலகளாவிய மாநாடாக இதனை மத்திய அரசு நடத்தவிருக்கிறது. இது தொடர்பாக நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி பிரபலங்கள் பலருடன் வீடியோ காலில் ஒன்றிணைந்து இந்த மாநாடு தொடர்பாக பேசியிருக்கிறார். சுந்தர் பிச்சை, முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், ஷாருக் கான், சிரஞ்சீவி, மோகன் லால், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், அமீர் கான், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் எனப் பலரும் மோடியுடன் நேற்றைய தினத்தின் உரையாடலில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மோடி, `` வேவ்ஸ் மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டோம். இந்த உலகளாவிய மாநாடு பொழுதுபோக்கு, படைப்பாற்றல் மற்றும் கலாசாரத்தை ஒன்றிணைக்கிறது. இதற்கான ஆலோசனைக் குழுவில் இருக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டு நேற்றைய தினம் ஆலோசனை வழங்கினர். இந்தியாவை ஒரு உலகளாவிய பொழுதுபோக்கு மையமாக மாற்றுவதற்கான கருத்துக்களை அவர்கள் பகிர்ந்தனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Thank you Hon’ble Prime Minister Shri @narendramodi ji for this honor.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) February 8, 2025
It was indeed a privilege to be part of the Advisory Board for WAVES ( World Audio Visual Entertainment Summit ) and share my two cents along with other esteemed members.
I have no doubts that #WAVES,… https://t.co/zYxpiWVglipic.twitter.com/VvFj0XGjzt
இது கலந்துரையாடல் குறித்து சிரஞ்சீவி, `` இந்த வேவ்ஸ் மாநாட்டிற்கான மீட்டிங்கில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். மற்ற மதிப்புமிக்க உறுப்பினர்களுடன் எனது சிறிய பங்களிப்பைக் கொடுத்ததை பாக்கியமாக கருதுகிறேன். மோடி அவர்களால் உருவான இந்த வேவ்ஸ், இந்தியாவின் சாஃப்ட் பவரை அதற்குரிய உயரத்திற்குக் கொண்டுச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விரைவில் புதிய முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்." எனப் பதிவிட்டிருக்கிறார்.