என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும்: நாராயணச...
கேரளத்தில் பிரியங்கா காந்தி: காங்கிரஸ் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை காலை கேரளத்திற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வயநாடு எம்.பி. பிரியங்காவை காலை 10 மணியளவில் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறக்கியபோது, கேரள காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) தலைவர் கே. சுதாகரன் வரவேற்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக வயநாடு செல்கிறார்.
காங்கிரஸ் எம்பி வயநாடு மாவட்டத்தின் கட்சித் தலைமையுடன் சந்திப்புகளை நடத்த உள்ளார். மேலும் பொதுக்கூட்டங்கள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை.
கட்சி வெளியிட்ட அவரது பயணத் திட்டத்தின்படி, மனந்தவாடி, சுல்தான் பத்தேரி மற்றும் கல்பேட்டா சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள உயர் மட்டத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவார்.
இன்று மாலை கல்பேட்டாவில் உள்ள பள்ளிக்குன்னுவில் உள்ள லூர்து மாதா தேவாலயத்திற்குச் செல்வார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஞாயிற்றுக்கிழமை, எரநாடு மற்றும் திருவம்பாடி சட்டபேரவைத் தொகுதிகளில் உள்ள உயர்மட்ட அளவிலான தலைவர்களுடன் அவர் சந்திப்புகளை நடத்துவார்.
திங்கள்கிழமை, வண்டூர், மற்றும் நீலம்பூர் தொகுதிகளில் உள்ள தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவார், மேலும் காட்டு விலங்குகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்பங்களையும் அவர சந்தித்துப் பேச உள்ளார்.
மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வயநாட்டிற்கு இது அவரது இரண்டாவது வருகை‘ இதுவாகும்.
முன்னதாக, ஜனவரி 28ஆம் தேதி, வயநாட்டில் உள்ள மனந்தவாடி கிராமத்தில் புலி தாக்குதலில் பலியான பெண்ணின் குடும்பத்தினரை பிரியங்கா சந்தித்துப் பேசினார். கடந்த ஆண்டு டிசம்பரில் தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட கட்சியின் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் என்.எம். விஜயனின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தார்.