செய்திகள் :

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையானது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,930-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கும், வெள்ளிக்கிழமை விலை மாற்றமின்றி கிராம் ரூ.7,930-க்கும், பவுன் ரூ.63,440-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், புதிய உச்சமாக சனிக்கிழமை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஐந்து நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1920 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,07,000-க்கு விற்பனையாகிறது.

தில்லி தேர்தல் முடிவுகள்: பாஜக 43, ஆம் ஆத்மி கட்சி 27-ல் முன்னிலை!

புதுதில்லி: தில்லி சட்டப்பேரவைக்கானத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக 43 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 27 தொகுதிகளிலும் முன்னி... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சல்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு!

ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் இடது சாரி நக்சல்களுக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலங்கீரின் கங்காமர்தன் குன்றுகளி... மேலும் பார்க்க

பூனையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க தடயவியல் சோதனை!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் வளர்ப்புப் பூனையின் உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிய அதன் முடிகளை காவல் துறையினர் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.நல்கொண்டாவைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் க... மேலும் பார்க்க

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்று வரும் நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இ... மேலும் பார்க்க

27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்: சித்தார்த் சாஹிப் சிங்

புதுதில்லி: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் என புதுதில்லி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் சகோதரர் சித்தார்த் சாஹிப் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும்... மேலும் பார்க்க

தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை

புதுதில்லி: தில்லி சட்டப்பேரவைக்கானத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக 36 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 16 இடங்களிலும் முன்னிலை பெற... மேலும் பார்க்க