செய்திகள் :

'கைவிலங்கிட்டு அனுப்பப்பட்ட இந்தியர்கள்' - நண்பர் மோடியை கைவிட்டுவிட்டாரா ட்ரம்ப்?!

post image

பிறநாடுகளிலிருந்து வந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் மக்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்து வருகிறார். முதலில் கொலம்பியர்கள்தான் அவர்களின் சொந்த நாட்டுக்கு இரண்டு ராணுவ விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அந்த நாடு, "கொலம்பியா நாட்டவர்களை குற்றவாளிகளைப் போல அமெரிக்க நடத்தக்கூடாது" என கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கூடவே அமெரிக்க விமானங்கள் கொலம்பியாவில் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

அமெரிக்கா

இதையடுத்து ட்ரம்ப், "கொலம்பியா பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும். ஒரு வாரத்திற்கு பிறகு 50% அதிகரிக்கப்படும். அந்த நாட்டினர் அமெரிக்காவிற்கு வருவதற்கு பயணத் தடை விதிக்கப்படும். அவர்களின் விசாவும் ரத்து செய்யப்படும்" என அறிவித்தார். இதையடுத்து, "எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என கொலம்பியா அரசு தெரிவித்திருக்கிறது. அதன்பிறகுதான் அந்த நாட்டின் மீது வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதேபோல் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில், "சீனா இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிப்பதாக" ட்ரம்ப் அறிவித்தார். முன்னதாக இந்தியா குறித்தும் அவர் கூடுதல் வரி விதிப்பதாக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையையும் அவர் எடுக்கக்கூடும் என பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ட்ரம்பை சமாதானப்படுத்தும் விதமாக பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டிருந்தது. அதாவது தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன், "1,600 சிசி வரையிலான எஞ்சின் திறன் கொண்ட, முற்றிலும் கட்டமைக்கப்பட்ட (CBU) யூனிட்களாக இறக்குமதி செய்யப்படும் உயர்தர மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி வரி 10% குறைக்கப்படும்.

ஹார்லி டேவிட்சன் Bronx

இதேபோல் 40,000 டாலருக்கு மேல் விலையுள்ள சொகுசு கார்களுக்கான கட்டண விகிதம் முன்பு விதிக்கப்பட்ட 125 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான அடிப்படை சுங்க வரிகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போன் பேட்டரி தயாரிப்பில் உள்ள 28 பொருள்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என அறிவித்தார். இதன் மூலம், "அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன், டெஸ்லா, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பயன்பெறும். இந்தியா மீது எந்த நடவடிக்கையும் ட்ரம்ப் எடுக்கக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இந்த நடவடிகளெல்லாம் ட்ரம்பை சமாதானப்படுத்திவிடவில்லை. சட்டவிரோதமாக குடியிருப்பதாக கூறி 104 இந்தியர்கள் சமீபத்தில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்த விமானத்தில் இருந்தவர்கள் கைவிலங்கிடப்பட்டிருந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அமெரிக்காவின் நாடு கடத்தல் நடவடிக்கை என்பது புதிதல்ல. கடந்த 2009ம் ஆண்டு முதல் இப்படி அமெரிக்கா செய்து வருகிறது.

கைவிலங்கிற்கு காரணம் சொல்லும் ஜெய்சங்கர்!

மேலும் அந்த நாட்டின் விதிமுறைகளின்படியே அவர்கள் கைவிலங்கிட்டு அழைத்துவருகிறார்கள்" என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், "எந்த நாட்டிலும் இந்தியர்கள் சட்டவிரோதமாக புலம்பெயர்வதை இந்தியா எப்போதும் ஆதரிக்காது. ஏனெனில் இது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் புகழுக்கு நல்லதல்ல. அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை இந்தியாவுக்கு சட்டபூர்வமாக அழைத்துவருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன், "இந்தியாவை விட மிகவும் சிறிய நாடு கொலம்பியா. அவர்கள் கூட தங்களது நாட்டவரை மரியாதையாக அமெரிக்கா நடத்த வேண்டும் என கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சொந்த நாட்டு விமானத்தை அமெரிக்காவுக்கு அனுப்பி தங்கள் நாட்டவரை திரும்ப பெற்றிருக்கிறார்கள். இந்த அடிப்படை நாகரீகம் கூட பிரதமர் மோடிக்கு கிடையாது. இந்திய அரசாங்கத்திடம் விமானமே இல்லை என்கிற அவலநிலையை உலகுக்கு தெரியப்படுத்திவிட்டார், மோடி. அரசு விமானங்களை தனியாருக்கு கொடுத்துவிட்டார். எனவேதான் கையை பிசைந்துகொண்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஜி.கே.முரளிதரன்

ஆனால் ரூ.8,000 கோடி செலவில் தனக்கென சொகுசு விமானம் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் உலகம் முழுவதும் சுற்றுலா செல்கிறார். அது பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்நிய விமானத்தில் அழுதுகொண்டு இந்தியர்கள் வருகிறார்கள். இத்தனைக்கும் ட்ரம்புக்கு முட்டுக்கொடுத்தவர்தான் பிரதமர் மோடி. அவர் இங்கு வரும்போது இந்தியாவின் ஏழ்மைநிலை தெரித்துவிடக்கூடாது என சாலையின் இரு பக்கத்திலும் தடுப்புகளை அமைத்து மறைத்தார். இப்படியெல்லாம் கூத்தும் அடித்தவர்தான் நமது பிரதமர்.

தற்போது ஏலியன்ஸ் என்று சொல்லி இந்தியர்களை கை, கால்களை விலங்குகளில் கட்டி அனுப்பி வைத்திருக்கிறார், ட்ரம்ப். இங்கிருந்து சென்ற யாரும் கோடீஸ்வரர்கள் இல்லை. அவர்கள் தங்கள்து வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்காக சென்ற அப்பாவிகள்தான். ஒருவேளை அதானி, அம்பானி போன்ற செல்வந்தர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மோடி நடவடிக்கை எடுத்திருப்பார். ஏழைகள் என்றாலே அவருக்கு ஆகாது. முந்தையகாலத்தில் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனாவில் மக்கள் உயிரிழக்கும் போதும் பிரதமர் கண்டுகொள்ளவில்லை. பிறகு இதற்கு மட்டும் எப்படி நடவடிக்கை எடுப்பார். இவரை பிரதமராக தேர்வு செய்ததற்கு இன்னும் என்னென்ன பாவத்தை மக்கள் அனுபவிக்க போகிறார்களோ?" எனக் கொதித்தார்.

ஏ.என்.எஸ்.பிரசாத்,

தொடர்ந்து பேசிய பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், "அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 104 பேர் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இந்தியனாக எனக்கும் வேதனையாக இருக்கிறது. ஆனால், சட்டவிரோத குடியேற்றங்களை எந்த நாடும் ஆதரிக்க முடியாது. ஏனெனில் சட்டவிரோத குடியேற்றங்களால் பெரும் பிரச்னைகளை இந்தியாவே சந்திக்கிறது. வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவில் உள்ளனர். நம் தமிழகத்தின் திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளனர். அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை நாம் தொடங்கியிருக்கும் நிலையில், அமெரிக்க அரசின் நடவடிக்கையை மட்டும் எதிர்க்க முடியாது.

சட்டவிரோதமாக குடியேறிய வேறு நாட்டவர்களை கை, கால்களில் விலங்கிட்டு அனுப்புவதை அமெரிக்கா கொள்கையாக வைத்துள்ளது. ஆண்டுதோறும் அப்படி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர்களின் பட்டியலை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். எந்தவொரு நாட்டுக்கும் படிப்பதற்காகவே, வேலைக்காகவோ சட்டப்படி செல்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏஜெண்டுகளின் ஆசைவார்த்தையை நம்பி, பல லட்சம் பணம் கொடுத்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்குதான் இப்போது சொந்தநாடு திரும்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் இந்தியர்கள் மனிதநேயத்துடன் சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்று போதிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி கை, கால்களில் விலங்கிட்டு இந்தியர்கள் யாரையும் அமெரிக்கா அனுப்பாது. அதற்கான பணிகளை மோடி அரசு கண்டிப்பாக மேற்கொள்ளும். இதை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தால் எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.” என்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Delhi: `பாஜக-விற்கு வாழ்த்துகள்... மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்!' - தோல்வி குறித்து கெஜ்ரிவால்

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக 48... மேலும் பார்க்க

Delhi : 'பாஜக தலைநிமிர்கிறது; ஆம் ஆத்மி தலைகுனிகிறது; காங்கிரஸ்...'- ரைமிங்கில் தமிழிசை

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 4... மேலும் பார்க்க

`ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' - டெல்லி தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலை கவிழ்த்த மதுபானக் கொள்கை!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 2015, 2025ம் ஆண்டுகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தோற்கடித்து அடுத்தடுத்து அமோக வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத... மேலும் பார்க்க

Delhi : கெஜ்ரிவாலை தோற்கடித்த முன்னாள் முதல்வரின் மகன் - முதல்வர் ரேஸிலிருக்கும் பர்வேஷ் வர்மா யார்?

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.இன்று மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 47... மேலும் பார்க்க

Delhi: '27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியை பிடிக்கும் பா.ஜ.க' - கொண்டாட்டத்துக்கு தயாராகும் மோடி & கோ!

தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.இந்தத் தேர்தலில் 60.42 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று வாக்... மேலும் பார்க்க

`Donke Route' என்றால் என்ன? - சட்டவிரோத குடியேற்றமும் ஆபத்தான பயணமும்! | Explained

ட்ரம்ப்பின் அதிரடி!அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், 'அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தப்படுவார்கள்' என அறிவித்தார். அதன் அடிப்படையில், சி17 என்ற அமெரிக்காவின் போர் வ... மேலும் பார்க்க