Marvel - DC: `கேப்டன் அமெரிக்கா', `சூப்பர் மேன்'... இந்தாண்டு வெளிவரவிருக்கு மார...
27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்: சித்தார்த் சாஹிப் சிங்
புதுதில்லி: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் என புதுதில்லி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் சகோதரர் சித்தார்த் சாஹிப் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவினரின் கடின உழைப்பு மற்றும் அரவிந்த் கேஜரிவாலின் தலைமையின் தோல்விக்குக் காரணம் என்று கூறினார்.
புதன்கிழமை தோ்தல்களுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகள் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை விட பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஆனால், காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறாது என்று தெரிவித்திருந்தது.
இருப்பினும், தோ்தலுக்கு பிந்தைய இரண்டு கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றும், பல்வேறு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் நெருக்கமான போட்டி இருக்கும் என்றும் தெரிவித்திருந்தன. .
இந்த நிலையில், தோ்தல்களுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆம் ஆத்மி கட்சி முழுமையாக நிராகரித்தது. கருத்துக்கணிப்புகள் ‘வரலாற்று ரீதியாக’ அதன் செயல்திறனை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகக் கூறியது. அதே நேரத்தில் பாஜக இந்த கணிப்புகளை மக்களின் மாற்றத்திற்கான அறிகுறி என்று கூறியுள்ளது.
இதற்கிடையே, ‘ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கேஜரிவால் மீது மக்கள் மத்தியில் எவ்வளவு கோபம் உள்ளது என்பதை பாா்க்க முடிந்தது. மக்களுக்கு பாஜக மீது நம்பிக்கை உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் பாஜக அரசை அமைக்க அவா்கள் விரும்புகிறாா்கள்‘ என பாஜக தெரிவித்தது.
மேலும் பிரதமா் மோடியின் தலைமையில் தில்லியில் அரசை அமைக்கப்போம் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறேன். இது தில்லியின் முழுமையான வளா்ச்சியை உறுதி செய்யும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
கேஜரிவால், அதிஷி தொடர்ந்து பின்னடைவு! மணீஷ் சிசோடியா முன்னிலை
இந்த நிலையில், சனிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய புதுதில்லி தொகுதி பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் சகோதரர் சித்தார்த் சாஹிப் சிங், தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக, பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு அன்றே மக்கள் தங்கள் முடிவை எடுத்துவிட்டதாகவும், இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று வெற்றியைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் சிங் கூறினார்.
மேலும் "பாஜக வெற்றியில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மக்கள் 5 ஆம் தேதியே தங்கள் முடிவை வழங்கிவிட்டனர், இன்று, இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக அரசு அமைக்கப் போகிறது என்பதை உறுதி செய்வோம்."
"ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜரிவாலும் குற்றச்சாட்டுகளை மட்டுமே கூறுகின்றனர். இன்னும் சில மணிநேரங்களில், தங்கள் தோல்விக்கான முடிவை அவர்கள் பெறும்போது, வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுவார்கள். இவற்றில் எல்லாம் நாம் அதிக கவனம் செலுத்தக்கூடாது," என்று சிங் கூறினார்.
வெற்றிபெற வாய்ப்புள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சிலரை பாஜகவினர் தொலைபேசியில் அழைத்து, தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னதாகவே கட்சி மாறினால் ரூ. 15 கோடி அளிப்பதாக பேரம் பேசியதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டினார். பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் காலை 9.40 மணிக்கு வெளியான தகவலின்படி, பர்வேஷ் சாஹிப் சிங் 74 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார், அதே நேரத்தில் அரவிந்த் கேஜரிவால் மற்றும் காங்கிரஸின் சந்தீப் தீட்சித் ஆகியோர் பின்னிலையில் உள்ளனர்.
பாஜக 24 இடங்களிலும், ஆம் ஆத்மி ஆறு இடங்களில் முன்னிலை வகித்து வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் தில்லியில் இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று வெற்றியைக் குறிக்கும் வகையில் மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.