ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ்!
தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட முன்னிலையில் இல்லை.
70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காலை 10.15 மணி நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணைய இணையதள தரவுகளின்படி பாஜக - 41, ஆம் ஆத்மி - 28 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில்(பட்லி தொகுதி) மடடும் முன்னிலை வகித்து வந்த நிலையில் அந்த தொகுதியிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-08/c5mqvjoc/bjp1.png)
2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.