அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
ராணிப்பேட்டை: மக்களை அச்சுறுத்தி தொடர் வழிப்பறி - 2 திருடர்களுக்கு 6 ஆண்டுகள் சிறை
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (37). மகாவீர் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). இருவரும் சேர்ந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி வந்தனர்.
கடந்த 28-8-2020 அன்று ஆற்காடு தாலுகாவுக்கு உட்பட்ட மேல்விஷாரம் பகுதியிலும், 31-8-2020 அன்று ஆற்காடு கல்லூரியின் சந்திப்புப் பகுதியிலும் அடுத்தடுத்து வழிப்பறியில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக, ஆற்காடு நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழிப்பறி கொள்ளையர்களான ஜெயக்குமார், அருண்குமார் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/golkrgj2/WhatsApp_Image_2025_02_07_at_11_43_58_PM.jpeg)
இந்த வழக்குகளின் விசாரணை ஆற்காடு உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி-7) ``இரண்டு வழக்குகளிலும் தனித்தனியாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், இரண்டாயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதையடுத்து, வழிப்பறி திருடர்கள் ஜெயக்குமார், அருண்குமார் 2 பேரும் சிறையிலடைக்கப்பட்டனர்.