ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!
`எனக்கு லீவு வேணும்..' -தர மறுத்ததால் சக ஊழியர்களைக் கத்தியால் குத்திய அரசு ஊழியர்
மேற்கு வங்கம் மாநிலத்தில், விடுப்பு அளிக்க மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை அரசு ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவில், அந்த நபர் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் சாலையில் நடந்து செல்வதும், வீடியோ எடுக்கும் வழிப்போக்கர்களை அருகில் வாரதீர்கள் என்று மிரட்டுவதும் பதிவாகியிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அந்த நபர் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டம் சோடேபூரில் உள்ள கோலாவில் வசிக்கும் சர்க்கார் என்ற பெயர் கொண்டவர் என்றும், கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியிலுள்ள கரிகாரி பவனில் தொழில்நுட்பக் கல்வித் துறை அலுவலகத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றிவருகிறார் என்றும் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில்தான், விடுப்பு தர மறுத்ததாக அலுவலகத்தில் சக ஊழியர்கள் நான்கு பேரை கத்தியால் குத்தியிருக்கிறார்.
இதில் காயமடைந்த ஜெய்தேப் சக்ரவர்த்தி, சாந்தனு சஹா, சர்தா லேட், ஷேக் சதாபுல் ஆகியோர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய மூத்த போலீஸ் அதிகாரியொருவர், விடுப்பு அளிக்க மறுத்ததால் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதலில் சர்க்கார் கத்தியால் குத்தியதாகவும், எதற்காக அவருக்கு விடுப்பு மறுக்கப்பட்டது என்ற காரணம் தெரியவில்லை என்றும் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs