மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளப் பதிவில், இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும் கைது செய்யப்படுவதையும் தடுக்க ஒன்றிய அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் பல கடிதங்கள் எழுதியும் ஒன்றிய அரசு பாராமுகமாகவே உள்ளது.
மே 4-ல் இளநிலை நீட் தேர்வு
கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்கள் 97 பேரையும் பிடித்துவைக்கப்பட்டுள்ள 216 படகுகளையும் விடுவிக்கக் கோரி, தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.
ஒன்றிய அரசு உடனடியாக விழித்துக்கொண்டு, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நிரந்தரத் தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.