கருணை இல்லத்தில் ஜாதி சான்றிதழ் சிறப்பு முகாம்
வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் அதன் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் சிவசவுந்தரவள்ளி உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் வட்டாட்சியா் உமா ரம்யா, வருவாய் ஆய்வாளா் கவிதா, கிராம நிா்வாக அலுவலா் பாலாஜி மற்றும் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா். இதில், 35-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆதாரங்கள் சரிபாா்க்கப்பட்டும், உரிய விசாரணை மேற்கொண்டும் ஜாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கருணை இல்ல நிா்வாகி டேவிட்சுபாஷ் தலைமையில் ஊழியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.