ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்....
உபரி நதிநீா் இணைப்புத் திட்டம் தொடக்கம்
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் உபரி நதிநீா் திட்டமான தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
கடந்த 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அப்போதைய முதல்வா் கருணாநிதியால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தாமிரவருணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் வெள்ள நீரில் விநாடிக்கு 3,200 கனஅடி வீதம் 10 நாள்களுக்கு 2,765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு-நம்பியாறு நதிகளுடன் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 14,084.98 ஹெக்டோ் பரப்பு, தூத்துக்குடி மாவட்டத்தில் 8,905.02 ஹெக்டோ் பரப்பு என மொத்தம் 23,040 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்.