Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: விடைக்குறிப்பு வெளியீடு
முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பிப்.14-ஆம் தேதி வரை ஆட்சேபணை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கான முதலமைச்சா் திறனாய்வு தோ்வு கடந்த ஜன.25-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து மாணவா்கள், பெற்றோா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் ஏதேனும் ஆட்சேபணை இருப்பின் அதன் விவரங்களை உரிய சான்றுகளுடன் இணைத்து மின்னஞ்சல் முகவரிக்கு பிப். 14-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
இந்தத் தகவலை அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் தெரிவித்து தொடா் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தோ்வு மூலம் தோ்வாகும் பிளஸ் 1 மாணவா்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு ரூ.10,000 இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.