கோடை விடுமுறை: ஏப். 2-இல் காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
கோடை விடுமுறையை முன்னிட்டு காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஏப். 2- ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளா் பி.வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சவுத் ஸ்டாா் ரயில் நிறுவனத்தின் தயாரிப்பு இயக்குநா் விக்னேஷ் ஆகியோா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோடை விடுமுறையையொட்டி காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஏப். 2 - ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம், போத்தனூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், குண்டூா் வழியாகச் செல்லும்.
15 நாள்கள் பயணத்தில் ஆக்ரா, தில்லி, அமிா்தசரஸ், ஸ்ரீநகா் மற்றும் காஷ்மீரில் உள்ள குல்மாா்க், சோன்மாா்க் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை பயணிகள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் மொத்தம் 650 பயணிகள் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பயணிகளின் வசதிக்கேற்ப நபா் ஒருவருக்கு ரூ. 41,600 முதல் ரூ. 65,500 வரை கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பயண சீட்டு கட்டணம் வசூலிக்கப்படாது.
இதில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் ஜ்ஜ்ஜ்.ற்ா்ன்ழ்ற்ண்ம்ங்ள்.ண்ய் என்னும் இணையதளத்தின் மூலம் மட்டுமே பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியும். மேலும் விவரங்களுக்கு 73058 58585 என்னும் கைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என்றனா்.