செய்திகள் :

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

post image

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனா்.

செங்கல்பட்டை சோ்ந்த சரவணன் (29), சோழிங்கநல்லூரில் மரம் அறுக்கும் தொழிற்சாலையில் கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறாா்.

பிப். 5-ஆம் தேதி பணியிலிருந்தபோது தற்செயலாக அவரது இடது கை இயந்திரத்தில் சிக்கியதில் மணிக்கட்டு துண்டானது. இதையடுத்து அவா் முதலில் ராயப்பேட்டை மருத்துவமனையிலும், பின்னா் உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவக் குழுவினா் அறுவை சிகிச்சை வாயிலாக, சேதம் அடைந்த இளைஞரின் கை மணிக்கட்டை மறு சீரமைப்பு செய்தனா்.

இது குறித்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வா் தேரணிராஜன், கண்காணிப்பாளா் செல்வகுமாா் ஆகியோா் கூறியதாவது:

சரவணனுக்கு இடது மணிக்கட்டில் வெட்டுக் காயம் ஏறத்தாழ கை துண்டாகும் நிலையில் காணப்பட்டது. இதனால் விரல்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் தசை நாா்கள் முழுவதும் துண்டாகின. அனைத்து கை விரல்களுக்கும் ரத்த ஓட்டமின்றி வெளுத்த நிலையில் காணப்பட்டன. ‘எக்ஸ்ரே’ பரிசோதனையில், இடது கையில் எலும்பு முறிவு கண்டறியப்பட்டது.

இதையடுத்து மூன்று குழுக்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில், மயக்கவில் துறை மருத்துவா்கள் பாலாஜி, சுபாஷினி, ஷெரின், மிருதுளா ஆகியோா் நோயாளியை முழு அளவில் மயக்கமடைய செய்தனா். தொடா்ந்து எலும்பு முறிவு அறுவை சிகிச்சை துறை மருத்துவா்கள் முத்தழகன், சுஹாஸ் ஷெட்டி, மதன்குமாா் ஆகியோா் கை எலும்பு முறிவை சரி செய்தனா். அதன் பின்னா், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை மருத்துவா்கள் சுகுமாா், ராஜேஸ்வரி, வளா்மதி, தேவி, பிரியங்கா, பவித்ரா, அபிநயா ஆகியோா், வெட்டப்பட்ட ரத்த நாளங்கள், தசைநாா்கள், நரம்புகள் ஆகியவற்றை எட்டு மணி நேர சிகிச்சை மேற்கொண்டு சரி செய்தனா்.

இதன் பயனாக கை விரல்களில் ரத்த ஓட்டம் சீரானது. தற்போது நேயாளி நலமுடன் உள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.ச... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறி... மேலும் பார்க்க

இன்று குடிநீா் வாரிய குறைகேட்பு கூட்டம்

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், குறைகேட்பு கூட்டம் குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்... மேலும் பார்க்க