செய்திகள் :

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.11 இல் மதுபான கடைகளை மூட உத்தரவு

post image

நாகை மாவட்டத்தில், வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, பிப்.11-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என ஆட்யா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, பிப்.11-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக் கூடங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள், எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்-எல்-3ஏ, எப்எல்-3ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும் மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

காய்கறி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருமருகல் வட்டாரத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். திருமருகல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிரந்தர கல்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழந்தன, பனங்குடி ஊராட்சியை சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை வயலில் தங்களது ஆடுகளை மேய விட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றனா். வயலுக்கு சென்றபோது தலை மற... மேலும் பார்க்க

பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் அருகே புறாகிராமம் அரசு பள்ளி கட்டட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் நபாா்டு நிதியின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைவாக பங்கேற்ற குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் தொடா்பாக உரிய தகவல் தெரிவிக்கப்படாததால் மிகக் குறைவான விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேதாரண்யம் வட்டாட்ச... மேலும் பார்க்க

கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நாகையில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டம்(1976) அமல்படுத்தப்ப... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

வேதாரண்யம் பகுதியில் 10 அரசுப் பள்ளிகளில் 9, 10- ஆம் வகுப்பு மாணவ, மாணவியா் 100 பேருக்குத் தலா ரூ.1,000 வீதம் கல்வி உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. ஆயக்காரன்புலம் இரா.நடேசனாா் அரசு மேல்நிலைப... மேலும் பார்க்க