மணல் கடத்தல்: லாரி, பொக்லைன் பறிமுதல்; உரிமையாளா் கைது
சோளிங்கா் அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி, பொக்லைனை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரியின் உரிமையாளரை கைது செய்தனா்.
சோளிங்கரை அடுத்த நீலகண்டராயன்பேட்டை அருகே லாரியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, சோளிங்கா் காவல் ஆய்வாளா் பாரதி தலைமையில் போலீஸாா் மணல் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த லாரி மற்றும் மணல் ஏற்றும் பணியில் இருந்த பொக்லைன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். அப்போது அந்த லாரியின் ஓட்டுநா் தப்பிஓடி விட்டாா். அங்கிருந்த தொழிலாளா்களும் தப்பி ஓடி விட்டனா். இதையடுத்து, அந்த லாரி மற்றும் பொக்லைனின் உரிமையாளா் சோளிங்கரை அடுத்த மேல்வேலம் கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் (45) என்பவரை கைது செய்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.