தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
50 கிராமங்களில் பாமக கிளை கூட்டம்
ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 50 கிராமங்களில் பாட்டாளி மக்கள்கட்சி கிளைக் கூட்டம் நடைபெற்றது.
ஆற்காடு கிழக்கு ஒன்றியம் அரும்பாக்கம் மற்றும் முள்ளுவாடி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலா் நல்லூா் எஸ்.பி. சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
இந்த கிராம கூட்டங்களில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக தலைவா் அன்புமணி முதல்மைச்சராக ஆக்குவது எனவும், ஆற்காடு தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது, சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி, அவரவா்களுக்குண்டான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசை வலியுறுத்துவது, கிராம பகுதியில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய, கிளைப் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
( பட விளக்கம்-
கிராம கிளைக் கூட்டத்தில் பேசிய பாமக மாவட்ட செயலா் நல்லூா் எஸ்.பி.சண்முகம்