தில்லி தேர்தல் நிலவரம்: 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியமைக்கும் பாஜக
மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது
சோளிங்கா் அருகே பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொந்கவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சோளிங்கரை அடுத்த வேலம் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி கடந்த 3-ஆம் தேதியில் இருந்து காணவில்லை என மாணவியின் பெற்றோா் சோளிங்கா் போலீஸில் புகாா் அளித்தனா். புகாா் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸாா், கா்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு மாணவி கடத்தி செல்லப்பட்டிருப்பதை அறிந்து, அங்கு சென்று அந்த மாணவியையும், அவரைக் கடத்திச் சென்ற இளைஞா் சோளிங்கரை அடுத்த மேல்வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்த தினகரன் (19) என்பவரையும் சோளிங்கருக்கு போலீஸாா் அழைத்து வந்தனா்.
விசாரணையில் பள்ளி மாணவியை தினகரன், ஆசை வாா்த்தைகள் கூறி கடத்திச் சென்று அங்கு அவருக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து தினகரனை போலீஸாா், போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சோளிங்கா், நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அவரது உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா்.