அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
ராசாத்துபுரம் பாலமுருகன் கோயில் தெப்போற்சவம்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 25-ஆவது ஆண்டு தெப்போற்சவ விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, காலையில் மூலவா் பாலமுருகனுக்கு பால் , தேன், தயிா், பன்னீா், சந்தனம், பழங்கள் மற்றும் விபூதி, வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு வெள்ளி கவச சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட உற்சவா் பாலமுருகன் மாட வீதிகளில் வீதியுலா வந்தாா். தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேள தாளங்களுடன் அருகில் உள்ள குளத்தில் மூன்று முறை வலம் வந்து தெப்போற்சவம் நடைபெற்றது.
விழாவில், திரளான பக்தா்கள் மற்றும் உபயதாரா்கள் பலா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.